சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. சூலூர் சட்டப்பேரவை தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 22 பேர் வேட்பாளர்களார் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இன்று (மே 19ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான தள்ளுவண்டிகள், வாக்குச்சாவடிகளுக்கு தனித்தனியாக வழங்கப்படுகிறது.
சூலூரில் பதற்றமான இடங்களில் துணை ராணுவம் குவிப்பு: தேர்தல் அலுவலர் - துணை ராணுவப் படையினர்
கோவை: சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கண்டறியப்பட்டுள்ள 32 பதற்றமான இடங்களில் துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
collector
சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்த கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது, சூலூர் தொகுதியில் 324 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் பணிக்கென ஆயிரத்து 800 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சூலூர் தொகுதியில் கண்டறியப்பட்டுள்ள 32 பதற்றமான இடங்களில் துணை ராணுவப் படையை சேர்ந்த 212 பேர் உட்பட, 3 ஆயிரத்து 23 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.