தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சி.ஏ.ஏ. போராட்டத்தில் உண்மையை மறைக்கும் ஊடகங்கள்...!' - ஹெச். ராஜா - CAA protest H.Raja

கோவை: இஸ்லாமியர்கள் அமைதியாகப் போராட்டங்களை நடத்திவருகின்றனர் எனச் சில ஊடகங்கள் உண்மையை மறைப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பேட்டியளித்துள்ளார்.

caa-protest-hraja
caa-protest-hraja

By

Published : Mar 7, 2020, 12:31 PM IST

கோவை காந்திபுரம் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா, "இஸ்லாமியர்கள் அமைதியாகப் போராட்டங்களை நடத்திவருகின்றனர் என சில ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன, சில இடங்களில் காவலர்களைப் போராட்டக்காரர்கள் தாக்குகின்றனர் அது மறைக்கப்படுகிறது.

தேசபக்திமிக்க மக்களுக்கு ஒரு வேண்டுகோள், கடவுச்சீட்டு இல்லாத வெளிநாட்டவர்கள் யாரேனுமிருந்தால் அவர்களைப்பற்றி உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பின்போது

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை காங்கிரஸ் ஏற்கனவே கொண்டவர முயற்சிகள் எடுத்துள்ளன. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைதி நிலைக்கும் வகையில் போராட்டங்களைத் தூண்டுகின்றன. நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும் இவற்றைத் திரும்பப் பெற வாய்ப்பில்லை.

டெல்லியில் கொரோனா வைரஸ் இருப்பதாகக் கூறி போராட்டக்காரர்களைத் திசை திருப்பிவருவதாகச் சமூக வலைதளங்களில் பரவும் செய்தி வேடிக்கையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஹெச். ராஜா உருவப்படம் எரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details