கோவை மாவட்டம், வால்பாறையிலிருந்து 25 கி.மீ தொலைவில் சோலையார் அணை உள்ளது. இந்த அணை 1957ஆம் ஆண்டு தொடங்கி கட்டி முடிக்கப்பட்டு, 1965ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
இதன் நீர்த் தேக்கப் பரப்பளவு 8.705 சதுர மீ, உயரம் 66 மீட்டர், அகலம் 430 மீட்டர். கொள்ளளவு 150.20 மில்லியன் கன அடி ஆகும். இந்த நீரானது ஈரோடு, காங்கேயம் வரை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
வால்பாறை சோலையார் நீர் வரத்து குறைந்து வறட்சி இதன் பிரதான அண்டை மாநிலமான கேரள எல்லையில் உள்ள சாலக்குடி முதல் திருவனந்தபுரம் வரை, ஒப்பந்த அடிப்படையில் இங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 35 அடியாக குறைந்துள்ளதால் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.
இதையும் படிங்க:பெங்களூரில் ஆண் நண்பரால் சுடப்பட்ட பெண்!