கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இந்த அணை 165 கன அடி கொள்ளவு கொண்டது. வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் அப்பர்நீரர், லோயர் நீரர், காடம்பாறை அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கனமழை காரணமாக முதல் முறையாக நிரம்பிய சோலையார் அணை - தொடர் மழை
வால்பாறையில் உள்ள சோலையார் அணை தொடர் மழை காரணமாக முதல் முறையாக நிரம்பியது.
சோலையார் அணை
இந்த நிலையில் சோலையார் அணை முதல் முறையாக நிரம்பி உள்ளது. தற்பொழுது அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உத்தரவுக்கு பின் அணையில் உள்ள மதகுகள் திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கவியருவியில் காட்டாற்று வெள்ளம்; சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை