தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளையாட்டு மைதானத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! - தடகள விளையாட்டுப் போட்டி

கோவை: 28 ஆண்டுகள் ஆகியும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்காததால் விரைந்து சீரமைக்குமாறு சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

playground

By

Published : Oct 10, 2019, 5:38 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் சொந்தமாக நான்கு ஏக்கரில் மைதானம் உள்ளது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவதும், பொதுமக்கள் காலை மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதும் வழக்கமாக வைத்துள்ளனர்.

மேலும், கடந்த 1991ஆம் ஆண்டு தமிழக அரசு இந்த மைதானத்தை தடகள விளையாட்டுப் போட்டி மைதானமாக அமைக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஆனால் 28 ஆண்டுகள் கடந்தும் அரசு தடகளப் போட்டிக்கான மைதானத்தை அமைக்காமல் உள்ளததால் விளையாட்டு வீரர்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் தடகளப் போட்டிக்குச் செல்வதாக இருந்தால் அருகில் உள்ள கோவைக்குதான் செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். தமிழ்நாடு அரசு விரைவில் பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க உள்ள நிலையில், மாணவ, மாணவியர்கள் மற்றும் இளம் விளையாட்டு வீரர்கள் நலன் கருதி தடகள மைதானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவிக்காக கர்ப்பிணியாக மாறிய தொப்பை கணவர்- வைரல் புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details