தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபத்தான நிலையில் உள்ள உயர்மட்ட பாலத்தை சீரமைக்கக் கோரி சமூக ஆர்வலர் மனு - மாவட்ட ஆட்சியர்

கோவை: ஆபத்தான நிலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட பாலத்தை சீரமைக்கக் கோரி சமூக ஆர்வலர் வேலுச்சாமி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

சமூக ஆர்வலர் மனு

By

Published : May 28, 2019, 7:51 AM IST

கோவை மாவட்டம் ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் வேலுச்சாமி என்பவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு மனு அளித்தார்.

அதில், செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரை 850 கோடி ரூபாயில் போடப்பட்டுள்ள ஆறு வழிச் சாலையில், கருமத்தம்பட்டி சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் நாள்தோறும் சென்னை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளும், கனரக இயந்திரங்களும் அதிகளவில் சென்றுவருகின்றன.

ஆபத்தான நிலையில் உள்ள உயர்மட்ட பாலத்தை சீரமைக்கக் கோரி சமூக ஆர்வலர் மனு
ஆனால் தற்போது இந்த மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டும், பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்தும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

மேலும், மழைகாலம் தொடங்கினால் தண்ணீர் உள்ளே இறங்கி பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதேபோல் சோமனூர் பேருந்து நிலையத்தில் பழுது ஏற்பட்டபோது மனு அளித்து அதனை பழுது செய்யாததால் பேருந்து மேற்கூரை விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.

எனவே அது போன்ற சம்பவம் தற்போது நிகழாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் வேலுச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details