பசியாற சோறு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமூக ஆர்வலர் ராஜா சேது முரளி கோவையில் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
காந்தி வேடமணிந்து முகக்கவசம் வழங்கிய சமூக ஆர்வலர்! - social activist dressed at gandhi
கோவை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சமூக ஆர்வலர் ஒருவர், காந்தி வேடமணிந்தப்படி முகக்கவசங்களை வழங்கினார்.
mask
இந்நிலையில் இன்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காந்தியடிகள் போல வேடமிட்டு அவ்வழியே வரும் மக்களுக்கு 200 முகக்கவசங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கியது மட்டுமின்றி முகக்கவசத்தின் கட்டாயத்தையும் எடுத்துரைத்தார்.
இவர் ஏற்கனவே தலைகவசம் அணிவதன் அவசியம், மழை நீர் சேகரிப்பின் அவசியம் குழந்தை தொழில் ஒழிப்பு, பெண் சிசு கொலை போன்றவற்றை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.