தமிழ்நாடு

tamil nadu

பிடிபட்ட இரண்டு மணி நேரத்தில் 35 குட்டிகளை ஈன்றெடுத்த பாம்பு!

By

Published : Jun 26, 2020, 6:41 PM IST

கோயம்புத்தூர் : குளியல் அறையில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு அடுத்தடுத்து 35 குட்டிகளை ஈன்றதால் பாம்பு பிடித்தவர் அதிர்ச்சி அடைந்தார்.

பிடிபட்டு இரண்டு மணி நேரத்தில் 35 குட்டிகளை ஈன்றெடுத்த பாம்பு
பிடிபட்டு இரண்டு மணி நேரத்தில் 35 குட்டிகளை ஈன்றெடுத்த பாம்பு

கோயம்புத்தூர் கோவில்மேடு, திலகர் வீதி பகுதியில் வசித்து வரும் மனோகரன் என்பவரது வீட்டின் குளியலறையில், இன்று காலை (ஜூன் 26) பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதைக் கண்ட அவர், அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவரான முரளி என்பவரிடம் தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் அங்கு சென்ற முரளி, குளியல் அறையின் ஒரு மூலையில் பதுங்கியிருந்த பாம்பை மீட்டு, தான் கொண்டு வந்த பையினுள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து வனப் பகுதிக்குள் அவர் அதனை விட இருந்த நிலையில், பிடிபட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்பாம்பு தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த முரளி, அதே பகுதியில் ஒரு ஓரமாக அந்தப் பையை வைத்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுத்த அப்பாம்பு சுமார் 35 குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.

இந்நிலையில், பாம்பினை குட்டிகளுடன் இன்று மாலைக்குள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட இருப்பதாக முரளி தெரிவித்துள்ளார். அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்பு வகையான கண்ணாடி விரியன், அதிக குட்டிகளை ஈன்றெடுக்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பொள்ளாச்சியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details