கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வரும் நிலையில், கோவையில் சுமார் ஐந்து குளக்கரைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகின்றது. அதில் 67.17 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட உக்கடம் குளக்கரையை கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல்பாண்டியன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், கோவையில் பெரியகுளம், வாளாங்குளம், கிருஷ்ணம்பதி, செல்வசிந்தாமணி ஆகிய குளங்கள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இங்கு நடைபயிற்சி மேற்கொள்ளுதல், குழந்தைகள் விளையாடும் வசதிகள் போன்றவை உள்ளன. இதனை சுத்தமாக வைத்துக் கொள்ள அனைவரும் உதவ வேண்டும். நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் திடக் கழிவுகள், கழிவுநீர் இக்குளத்தில் வந்து சேர்வதை தவிர்க்க முடியும்.