ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவிக்கவுள்ளதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வெளியிட்டார்.
இதையடுத்து, கோவை மாவட்டத்தில் சிறு, குறு தொழில் துறை அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் நமது ஈடிவி பாரத் செய்தியாளரை சந்தித்து இந்த அறிவிப்புகள் குறித்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”மத்திய அரசு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. குறுந் தொழிலாளர்கள் கடன் பெறுவதற்கு எவ்வித சொத்துப் பிணையமும் தேவையில்லை என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
சிறு, குறு தொழில் துறை அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் வாராக் கடன் உள்ள தொழில் நிறுவனங்களுக்கென தனியாக ஐம்பதாயிரம் கோடி ரூபாய், ஒரு சிறு தொழில்களுக்கென 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலங்களில் ஒப்பந்த முறையில் பணிபுரிய ஆர்டர்கள் பெற்றுவரும் சிறு தொழில் துறையினருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள தொகையில் எவ்வளவு பங்கு அளிக்கப்படும் என தெளிவாக விளக்கப்படவில்லை. வாடகை வீட்டிலிருந்து தொழிலை மேற்கொண்டு வரும் தொழில் முனைவோர்களுக்கும் மத்திய அரசு சலுகைகள் அறிவிக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்த பத்தாண்டு அவகாசம் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு நான்கு ஆண்டுகள் மட்டுமே வழங்கியுள்ளது.
மத்திய அரசு திட்டங்களை அறிவித்தாலும், வங்கிகள் அவற்றிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. அறிவிக்கப்பட்டுள்ள கடன் தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்படவில்லை.
சிறு, குறு தொழில் துறை அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் சிறு, குறு தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தோம் அது குறித்து எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. ஐந்து கோடியிலிருந்து பத்து கோடி ரூபாய்வரை வருமானம் ஈட்டுபவர்களும் சிறு தொழில் நிறுவனங்களுக்குள் அடங்குவர் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.
சிறு, குறு தொழில் துறை அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மத்திய அரசு தொழிலாளர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே அவை மக்களுக்கு எவ்வாறு பலனளிக்கும் என முழுமையாகத் தெரியவரும்” என்றார்
இதையும் படிங்க:20 லட்சம் கோடி - என்னென்ன திட்டங்கள்? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!