கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக, நேற்று முன் தினம் (மார்ச்.14) பொள்ளாச்சியைச் சேர்ந்த திமுகவினர் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி ஜெயராமன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: திமுகவினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு! - கோயமுத்தூர் அண்மைச் செய்திகள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகக் கூறி திமுகவினர் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான திமுகவினர், திமுகவினர் மீது அதிமுகவினர் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு அச்சுறுத்துவதாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டுவரும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க :’234 அல்ல; எடப்பாடியில் வென்று காட்டுங்கள்’ - ஸ்டாலினுக்கு பழனிசாமி சவால்!