கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே நஞ்சே கவுண்டன் புதூர் ரயில்வே தண்டவாளத்தில் எலும்பு கூடு கிடந்துள்ளது. இதனைக் கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் மேற்கு காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தண்டவாளத்தில் கிடந்த எலும்பு கூடு...! - எலும்பு கூடு
கோயம்புத்தூர்: ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத எலும்பு கூடினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
எலும்பு கூடு
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் நிலையத்தினர் எலும்புக்கூடினைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் காவலாளி உடையில் இருப்பதாகவும் இறந்து ஒருவருடம் ஆகிறது எனவும், தலை, கால், கை தனியாகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இறந்தவர் யார் எனக் கண்டறியப் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் கடந்த வருடம் காணமல் போனவர்களின் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.