கோவை: சரவணம்பட்டி விளாங்குறிச்சியில் ஷீலா அப்பார்ட்மெண்ட் என்ற கட்டடத்தின் போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இரு சக்கர வாகனங்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் அடுத்தடுத்து தீ பிடித்து எரிந்துள்ளது.
இதுகுறித்து அங்குள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தீ விபத்தா? அல்லது தீ வைத்து எரிக்கப்பட்டதா..? என்பது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.