தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானை தந்தங்களை கடத்த முயற்சி: ஆறு பேருக்கு சிறை! - யானை தந்தங்களை விற்க முயன்ற ஆறு பேர் கைது

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற ஆறு பேரை வனத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

யானை தந்தங்கள் கடத்த முயற்சி
யானை தந்தங்கள் கடத்த முயற்சி

By

Published : Dec 23, 2020, 5:36 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சண்முகபுரம் என்ற இடத்தில் பறவைகள், மீன் வளர்ப்பு கடையில் யானைத் தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வன அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

யானை தந்தங்கள் பதுக்கல்:

அதன்பேரில், முதன்மை வனப்பாது காவலர், கள இயக்குநர் ஆகியோரின் உத்தரவின்படி கள துணை இயக்குநர் ஆரோக்கிய ராஜ் தலைமையில் கோட்டூர் பகுதியிலுள்ள பறவை, மீன் வளர்ப்பு கடைக்குச் சென்ற வன அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு யானையின் இரண்டு தந்தங்களை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடையின் உரிமையாளர் மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், இந்த சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரியும் சாமிநாதன், தூய்மை பணியாளராக பணி புரியும் காத்தவராயன் ஆகிய இருவரும் ரோந்து பணியின்போது வனப்பகுதியிலிருந்து இரு யானை தந்தங்களை எடுத்துவந்துள்ளனர்.

தந்தங்கள் கடத்திய நபர்கள் கைது:

பின்னர், அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பவர் மூலம் அதே பகுதியில் பொன்னுசாமி என்பவரது தோட்டத்தில் பணிபுரியும் சாரதி யானையின் இரு தந்தங்களை தோட்டத்து சாலையில் பத்திரப்படுத்தி மணிகண்டன், நந்தகுமார் ஆகியோர் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, யானை தந்தங்களை விற்க முயன்ற ஆறு பேரை கைது செய்த வனத் துறையினர், அவர்களை பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றம் இரண்டில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: யானை தந்தங்கள் திருட்டு: தேடுதல் வேட்டையில் மோப்ப நாய்!

ABOUT THE AUTHOR

...view details