கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் இணை மேலாண் இயக்குனராக பணி மாறுதல் பெற்றார். இதையடுத்து, கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கோவை மாநகராட்சியின் 29வது ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் இன்று (அக்.19) பதவியேற்றுக் கொண்டார். புதிய கமிஷனராக பதவியேற்ற சிவகுரு பிரபாகரனுக்கு ஊழியர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், புதிதாக பதவி ஏற்கும் மாநகராட்சி ஆணையாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது, "நான் 2018ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ். சென்னை மாநகராட்சியில் 2 வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளேன். அங்கு பாதாளச் சாக்கடை, சாலைகள், மருத்துவம், பள்ளி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு உள்ளேன்.