கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதியில் கைத்தறி நெசவு பிரதான தொழிலாக உள்ளது. இங்கு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு உள்ளனர்.
பட்டுப்புடவை என்றாலே விலை உயர்ந்தது. அவற்றை அணிவது, பராமரிப்பது சிரமமான நிலை என்ற நிலையைப் போக்கி குறைந்த விலையில் அதே நேரத்தில் அதிக எடையுள்ள கைத்தறிப் பட்டு புடவைகளை அறிமுகப்படுத்தியவர்கள் சிறுமுகை பகுதி நெசவாளர்கள்.
கலைநயத்துடன் இவர்கள் நெய்யும் மென்பட்டு, கோரா காட்டன் சேலைகள் நாடு முழுவதும் பிரசித்திப் பெற்றவை. சிறந்த கைத்தறி நெசவிற்கான மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு வந்த சீன அதிபருக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட அவரது உருவம் பொறித்த கைத்தறிப் பட்டு சால்வையும் இவர்களின் கைவண்ணமே. இவ்வாறு செயல்திறன்மிக்க இவர்களை ஒட்டுமொத்தமாக தற்போது முடக்கியுள்ளது கரோனா ஊரடங்கு.
கலையிழந்த கைத்தறிப் பட்டு நெசவுத் தொழிலை மீட்க கோரிக்கை! கரோனா ஊரடங்கால் 70 நாள்களுக்கு மேலாக எந்த ஒரு உற்பத்தியும், விற்பனையும் இல்லாத காரணத்தால் கைத்தறிகள் எதுவும் இயங்கவில்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவைகள் தேங்கியதால் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடிவருவதாகத் தெரிவிகின்றனர் சிறுமுகை பகுதி நெசவாளர்கள்.
இதையும் படிங்க...குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!