கோயம்புத்தூர் மாவட்டம், தண்ணீர் பந்தல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அதில், சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயராமின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட், பிளாஸ்டிக் இரட்டை இலை, பதாகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
சிங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி! - Election Flying Corps in Singanallur constituency
கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயராமின் புகைப்படம் அச்சிடப்பட்ட பொருள்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Election Flying Corps in Singanallur constituency
இதையடுத்து, பறக்கும் படையினர் ஓட்டுநரிடம் விசாரத்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அதேசமயம் அனுமதி கடிதமும் இல்லாததால் அவற்றை வாகனத்துடன் பறிமுதல் செய்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். மற்றவைகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:வாக்காளர்களுக்கு கொடுக்கப்படவிருந்த பரிசுப் பொருள்கள் பறிமுதல்