அகத்தியர் பிறந்த நாளையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சித்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சித்த மருத்துவ ஆயுஷ் முகாம் நடைபெற்றது.
இதில் சித்த மருத்துவ மூலிகைகள், சித்த மருத்துவ மருந்துகள், மருத்துவ குணமுடைய செடிகள், மருத்துவ புத்தகங்கள், மருத்துவ பயிர் வகைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு சித்த மருந்துகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இதுகுறித்து பேசிய அரசு சித்தா உதவி மருத்துவர் ஸ்ரீதேவி, அகத்தியர் பிறந்த நாளையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சித்த மருத்துவம் குறித்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மக்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் அதை அப்போதே என்னவென்று கவனித்து அதற்கான சித்த மருந்துகள் வழங்கப்படுகிறது, என்றார்.