தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.7000 கையூட்டு: வேலைக்கு வேட்டு - Rs. 7 thousand bribery

கோயம்புத்தூர்: சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.7000 கையூட்டு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரூ.7000 கையூட்டு
ரூ.7000 கையூட்டு

By

Published : Jun 22, 2021, 12:12 PM IST

Updated : Jun 22, 2021, 12:30 PM IST

பொள்ளாச்சியை அடுத்துள்ள நெகமம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பனியாற்றிவந்தவர் ஏசுபாலன். இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு மெட்டுபாவி என்னும் கிராமத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பந்தபட்டவர்களைத் தேடிச்சென்று சுற்றிவளைத்துப் பிடித்துள்ளார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.7000 கையூட்டாகப் பெற்றுள்ளார். இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்துக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தியதில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கையூட்டு பெற்றது உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக ஏசுபாலனை பணியிடை நீக்கம் செய்ய காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். இச்சம்பவம் நெகமம் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தர்மபுரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

Last Updated : Jun 22, 2021, 12:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details