தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்கள் கைப்பற்றல்! - Coimbatore car blast

கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.

கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்கள் கைப்பற்றல்
கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்கள் கைப்பற்றல்

By

Published : Nov 3, 2022, 10:48 PM IST

கோயம்பத்தூர்:கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அக். 23ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச்சிதறியது. இதில் காரில் இருந்தது உக்கடம் ஜி.என்.நகர் கோட்டை, புதூர் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியைச்சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்கள் கைப்பற்றல்

மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்ததாக கோவை உக்கடம் பகுதியில் உள்ள வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச்சேர்ந்த ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான்(28), என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்கள் கைப்பற்றல்

கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. இதனிடையே ஜமேசா முபின் வீட்டில் இருந்து காவல் துறையினர் கைப்பற்றிய சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை வைத்து விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆவணங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றன. அந்த குறிப்புகளில் ஹதீஸ் குறித்தும் ஜிகாத் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. ’அல்லாஹ்வின் இல்லத்தின் மீது கை வைத்தால் வேரறுப்போம்’ என சிலேட்டில் எழுதப்பட்டுள்ளது. அதில் யாருக்கெல்லாம் ஜிகாத் கடமை உண்டு, யாருக்கெல்லாம் இல்லை என்பது குறித்தும் எழுதப்பட்டுள்ளது. இது தவிர அரபி மொழியில் சில வாசகங்களும் சிலேட்டில் எழுதப்பட்டுள்ளன. இது குறித்தும் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.

இதையும் படிங்க:திருச்சியில் கல்லூரி மாணவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details