இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பழங்குடி இன மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்கிட கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில்,"இந்திய மாணவர்கள் சங்க கோவை மாவட்டத்தின் சார்பில் பழங்குடி இன மாணவர்களின் கல்வி நிலை குறித்து கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மலைவாழ் கிராமங்களில் தொடர் ஆய்வு செய்து வருகிறோம்.
மலைக் கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடி இன மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சாதி சான்றிதழ் இல்லை. இதனால், அரசு உடனடியாக அவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.