புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனியல் (54). இவர் கோவையில் உள்ள அத்திபாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கி, கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் உள்ள மெஸ் ஒன்றில் வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த 28ஆம் தேதி எட்டு வயது சிறுவனை வீட்டின் மாடிக்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவன் அவரது தாயிடம் கூறியதைத் தொடர்ந்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் ஒரு வார காலமாக சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துவந்தது தெரியவந்தது.