பொள்ளாச்சி: பாலக்காடு ரோடு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 34) திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர்,அப்பகுதியில் பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனநிலை பாதிக்கப்பட்டப் பெண் தனது பெற்றோரிடம் வசித்து வந்துள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்டப்பெண்ணை உடல்நிலை சரியில்லை என அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கும்போது பெண் கர்ப்பமாக உள்ளது தெரியவந்துள்ளது.