தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாநில பெண்ணை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது! - பாலியல் தொழில்

கோவை: பி.கே. புதூர் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் ஒருவர் உள்பட ஐந்து பேரை குனியமுத்தூர் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட வடமாநிலப் பெண்  பி கே புதூர்  covai pk puthur  sex worker covai pk puthur arrested  கோவைச் செய்திகள்  கோயமுத்தூர் செய்திகள்  பாலியல் தொழில்  கோவை
வடமாநிலப் பெண்ணை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது

By

Published : Jul 11, 2020, 10:08 AM IST

கோவை பி.கே. புதூர் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக குனியமுத்தூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது பி.கே. புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் அந்த வீட்டை சோதனையிட்டதில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது.

இது குறித்து வீட்டின் உரிமையாளர் நகுலன் என்பவரை விசாரணை செய்ததில், அவர் பாலியல் தொழில் நடப்பதை ஒப்புக்கொண்டார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், சரவணன், உன்னிக்குமார் ஆகிய மூவரும் நகுலனுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

பெண்கள் உள்பட ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்ட அந்தப்பெண்ணை பெண்கள் பாதுகாப்பு இல்லத்திலும் மற்றவர்களை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாநகராட்சி அலுவலர் ஆபாசமாக பேசவில்லை - கல்லூரி மாணவி விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details