கோயம்புத்தூர்:கோவையில் தங்களது பாலியல் இச்சைக்காக,‘லோகேண்டா’ என்ற இணையதளத்தை சிலர் அணுகியுள்ளனர். இதற்கு இணையதளத்தின் தரப்பில், உரிய கட்டணம் ஆன்லைன் மூலமாக வசூலிக்கப்பட்டு, குறிப்பிட்ட குடியிருப்பின் பெயர் மற்றும் கதவு எண்ணை கொடுத்துள்ளனர். ஆனால், அங்கு சென்று பார்த்தால் அனைத்தும் போலியானதாக இருந்துள்ளது.
இதனை வழக்கமாக பார்த்து வந்த குறிப்பிட்ட குடியிருப்பின் காவலாளி அளித்த புகாரின் அடிப்படையில், கோவை காவல்துறையினர் தனிப்படை அமைத்து பின்னணியில் உள்ளவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ‘லோகேண்டா’ என்ற வலைதளத்தில் செல்போன் எண்கள் பதிந்து, பெண்களை பாலியல் வேலைக்கு கொடுப்பதாக பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை ஏமாற்றிய கும்பலை கைது செய்துள்ளோம்.
இணையம் மூலம் பாலியல் பணி மோசடி - 12 பேர் கைது! இதில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 சிம் கார்டுகள் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளோம். இதில் ரிஸ்வாண் என்பவர் பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியுள்ளார். ரிஸ்வான் என்ற இந்த முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு இவர்கள் இணையதளம் மூலம் பணத்தை வசூலித்து வந்துள்ளனர். இவர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு வாழ்த்துகள். கோவை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறும் இடங்களை கண்டறிந்துள்ளோம். 360 டிகிரியில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
ஆந்திராவில் இருந்து கஞ்சா அதிகளவில் இறக்குமதி செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. கஞ்சா சாக்லேட் என்பது ராஜஸ்தானில் இருந்து வருகிறது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றுள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொருளாதார நெருக்கடி: இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்... அத்தியாவசிய பொருள்களுக்காக நடக்கும் அவலம்...