கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் மொத்தம் 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 884ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் ஒரே நாளில் கரோனாவினால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் பலி! - கோவையில் ஒரே நாளில் 7 பேர் பலி
கோவை : மாவட்டத்தில் இன்று (ஆக. 13) ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
seven corona patients died in coimbatore
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 175 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாயிரத்து 805ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது.