கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்து, கல்லூரி விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்லூரி விடுமுறை என்பதால், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளில் பெரும்பாலானோர், தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். ஒரு சில மாணவர்களோ சொந்த ஊருக்கு செல்லாமல் கல்லூரி விடுதியிலேயே தங்கி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை மாணவர்கள் தங்கி இருந்த பல்கலைக்கழக விடுதிக்குள், சுமார் 8 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு நுழைந்தது. பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் பயத்தில் கூச்சலிட்டனர். அவர்களின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு, அங்கு விரைந்த வந்த விடுதிக் காப்பாளர், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.