கோவை: மதுக்கரை மார்க்கெட், ஸ்ரீ ராம் விலாஸ் பகுதியில் வீடுகள் தொடர்ச்சியாக உள்ளன. அங்கு வசிப்பவர்கள் ரவிக்குமார் (விடுதி உரிமையாளர்), ரவிச்சந்திரன் (ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர்), வெங்கட் (ஓய்வுபெற்ற மென்பொருள் பொறியாளர்) உள்பட ஏழு பேர் வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து கீழ் தளத்திற்குச் சென்று பீரோவில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.