தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொள்ளாச்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியோரும் தேர்தலில் போட்டி' - செந்தில் பாலாஜி சாடல்! - திமுக

பொள்ளாச்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியோரும் தயக்கமில்லாமல் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவினரை சாடியுள்ளார்.

செந்தில் பாலாஜி சாடல்!
செந்தில் பாலாஜி சாடல்!

By

Published : Feb 11, 2022, 8:25 AM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அனைத்துத் தரப்பு கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், "58 ஆண்டுகளுக்கு முன்பு இதே பொள்ளாச்சி நகராட்சியை காங்கிரஸிடமிருந்து, திமுக கைப்பற்றியதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். 58ஆண்டுகளுக்கு முன்பே சாதித்த நம்மால், இப்போது சாதிக்க முடியாதா?.

தமிழ்நாடு முதலமைச்சர் முழு நேரமும் மக்கள் நலனைப் பற்றியே சிந்தித்து செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பொள்ளாச்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர்கள், தயக்கமே இல்லாமல் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வெறும் 8 மாதங்களில் நம் முதலமைச்சர் சாதித்துள்ளதை அனைத்துத் தரப்பு மக்களும் நன்கறிவர். ஆகையால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் முழு ஆதரவோடு நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். நாம் மட்டும்தான் வெற்றி பெறப் போகிறோம்" என்றார்.

இதையும் படிங்க:"எங்களை கோழைத்தனமாக தாக்க வேண்டாம்" - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details