தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 1,200 கிலோ தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் (நெகிழி) பொருள்கள் பறிமுதல்செய்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

By

Published : Dec 17, 2020, 10:01 AM IST

தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்பாடு பறிமுதல்
தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்பாடு பறிமுதல்

நெகிழி தடை (ம) பயன்பாடு

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாடு பல பகுதிகளில் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது.

நெகிழி பறிமுதல்

நெகிழிப் பொருள்கள் பயன்பாடு பொள்ளாச்சி நகராட்சிப் பகுதிகளில் அதிகரித்துள்ளது. இதனால், பொள்ளாச்சி நகராட்சிக்குள்பட்ட கடை வீதிகள், காந்தி மண்டபம், கோட்டூர் சாலை மற்றும் சத்திரம் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 40-க்கு மேற்பட்ட கடைகளில் ராம்குமார் நகர் நல அலுவலர், தூய்மைப்பணி ஆய்வாளர்கள் திடீர் ஆய்வுமேற்கொண்டனர்.

தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

அப்போது, கடைகளில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, 1,200 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல்செய்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நெகிழி ஒழிப்பு நடவடிக்கை தொடருமென நகர் நல அலுவலர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

மக்கள் விழிப்புணர்வு

தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பொதுமக்கள்,வியபரிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details