கோவை மதுக்கரையில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த வேனை (TN18AA5637) மடக்கி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணமின்றி ரூ. 56 லட்சம் மதிப்பிலான 456 வெளிநாட்டு மதுபானங்கள் இருந்துள்ளன.
உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் - kovai news
கோவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வெளி நாட்டு மதுபானங்கள் பறிமுதல்.
இதனையடுத்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டுனரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு மதுபானங்கள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
இதனையும் படிங்க: தேர்தலுக்கு பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம்: டிடிவி தினகரன்