ஆனைமலை பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆனைமலை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நள்ளிரவு ஆனைமலை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டெம்போவை வழிமறித்து சோதனை நடத்தினர்.
சோதனையில், 4.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக ஆனைமலை காந்தி நகரைச் சேர்ந்த ரபீக், பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த முகமது ரபீக், ஆனைமலையைச் சேர்ந்த பகிபுள்ளா ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடத்த முயற்சித்த ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
இதையுன் படிங்க: பெண்களுக்கு எதிரான தீரா வன்கொடுமை: அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!