தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு: விசாரணைக் கைதிகள் வீட்டில் சோதனை - விசாரணை கைதி

கோவை கார் வெடிப்புச்சம்பவம் தொடர்பாக போலீஸ் காவலில் உள்ள ஐந்து பேரிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

Coimbatore car blast: Inmates house raided
Coimbatore car blast Inmates house raided

By

Published : Oct 28, 2022, 4:20 PM IST

Updated : Oct 28, 2022, 5:45 PM IST

கோயம்புத்தூர்: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முதலில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரை காவலில் எடுத்து, காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் அவர்களது வீடுகளுக்கு தனி தனியாக அழைத்துச்சென்ற காவல்துறையினர், அவர்களின் வீடுகளில் சோதனையிட்டனர்.

சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் அவர்கள் எங்கு இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், அவர்களை அந்த பகுதிகளுக்கே அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்திற்கு அவர்களை மீண்டும் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை வரை 5 பேரிடமும் விசாரணை நடைபெற உள்ள நிலையில் மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கார் சிலிண்டர் வெடிப்பு... பாஜக முழு அடைப்புக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு

Last Updated : Oct 28, 2022, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details