குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம், காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கும்படி, எஸ்டிபிஐ அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம், பிரியாணி செய்யும் அண்டாவுடன் வந்து மனு அளித்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட துணை தலைவர் அப்துல் காதர், பாஜக நடத்தும் பேரணியில் எவ்வித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே, இந்தப் புகார் மனு அளித்துள்ளோம்.