இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், பல்வேறு தரப்பு பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (ஜூன் 10) எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் நூதன போராட்டம்! மேலும், ஒன்றிய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் இதனை அனைத்து மாநிலங்களும் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.