தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

One Day HM: ஒரு நாள் தலைமை ஆசிரியரான பள்ளி மாணவர்.. பொள்ளாச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்! - Makinambatti one day headmaster

அரசுப் பள்ளியில் காலாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக பள்ளி நிர்வாகிகள் பொறுப்பேற்க வைத்து கவுரவித்துள்ளனர்.

ஒரு நாள் தலைமை ஆசிரியரான பள்ளி மாணவன்
தர்ஷன்,கவின்ராஜ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 8:26 AM IST

ஒரு நாள் தலைமை ஆசிரியரான பள்ளி மாணவன்

கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை 276 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 14 ஆசிரியர்கள் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு தேர்வில் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஆண்டு மாநில அளவில் மாணவ, மாணவிகளை தேர்ச்சி பெற வைக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, காலாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராகவும், 2வது மதிப்பெண் பெறும் மாணவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வழங்கப்படும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன், பள்ளி மாணவர்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வில், மாணவர் தர்ஷன் முதலிடமும், கவின்ராஜ் 2வது இடமும் பிடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன், தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் தர்ஷன் ஒரு நாள் தலைமை ஆசிரியராகவும், 2ஆம் இடம் பிடித்த சுவின்ராஜ் உதவி தலைமை ஆசிரியராகவும் நியமித்து, பொன்னாடை அணிவித்து இருக்கையில் அமர வைத்து, ஒரு நாள் மட்டும் பொறுப்புகளை இரு மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார்.

இது குறித்து, ஒரு நாள் தலைமை ஆசிரியரான தர்ஷன் கூறுகையில், “பள்ளி மாணவ, மாணவிகள் இடையே கல்வி ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் கூறியது எங்களிடைய மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் நன்றாக படித்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். அதனால் எனக்கு ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு கிடைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அதனைத் தொடர்ந்து, மற்ற அரசுப் பள்ளிகளிலும் இது போன்று நடந்தால் எங்களைப் போன்ற மாணவர்களிடையே மேலும் கல்வியை கற்க ஆர்வமும், ஊக்கமும் ஏற்படும். மேலும் தற்போது சைபர் செக்யூரிட்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை பாதுகாக்க சைபர் செக்யூரிட்டி அதிகாரியாக வருவது எனது லட்சியமாகும்” என்றார்.

மேலும், பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், “கடந்தாண்டு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதை விட, நடப்பாண்டில் மாநில அளவில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என ஊக்கத்தை அளித்து கல்வியை கற்பித்து வருகிறோம். மாணவர்களும் ஆர்வமுடன் கல்வியை கற்பித்து வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல் இண்டு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர் பொறுப்பு வழங்கினோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"ராகுல் காந்தி ராவணன் தான்" - ஏ.பி.முருகானந்தம் பகிரங்க குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details