தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கத்தியைக் காட்டி பணம் பறித்த பள்ளி மாணவன் கைது!

கோவை: கத்தியைக் காட்டி பணம் பறித்த பள்ளி மாணவன் உட்பட இருவரை சூலூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பள்ளி மாணவன்
பள்ளி மாணவன்

By

Published : Feb 19, 2020, 5:53 PM IST

திருப்பூர் மாவட்டம், மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான இவர், தனது நண்பர் சந்திரமோகனுடன் முத்துக்கவுண்டன் புதூர் பாலத்தின் கீழே பணி நிமித்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த சிறுவன் உட்பட இரண்டு பேர் கத்தியைக் காட்டி, அவர்களிடம் இருந்த ரூ.200 பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் தப்பியோடிய இருவரையும் பிடித்து சூலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பட்டணம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கமல் (16) என்பதும், அவர் ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த அன்பழகன் மகன் கணேசன் (29) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

பின்பு, சிறுவன் கமலை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், கணேசனை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போன் பறிக்க முயன்ற சம்பவத்தில், கல்லூரி மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்களை தனிப்படை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், மீண்டும் கத்தியைக் காட்டி மாணவன் உள்பட இருவர் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: 'பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க... எங்களை கருணைக் கொலை பண்ணுங்க' - ஆட்சியரிடம் மனு அளித்த தம்பதி

ABOUT THE AUTHOR

...view details