தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகனை பள்ளியில் சேர்ப்பது போல் நடித்து ஆசிரியையிடம் நகை பறிப்பு! - கோவை மாவட்ட செய்திகள்

பள்ளியில் மகனை சேர்ப்பது போல சென்று, ஆசிரியரிடம் கத்தியைக் காட்டி நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையை தொடங்கியுள்ளது
காட்டூர் காவல்துறை

By

Published : Oct 31, 2021, 8:06 AM IST

கோவை:பள்ளியில் மகனை சேர்ப்பது போல் நடித்து, ஆசிரியையிடம் இருந்து பத்தரை பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தாப்புதூர் பகுதியில் உள்ள வி.கே.கே. மேனன் சாலை, வெங்கடசாமி லே அவுட்டைச் சேர்ந்தவர் பூண்டி. இவரது மனைவி அன்புக்கரசி. இவர் கோவை சின்னசாமி சாலையில், உள்ள தனியார்ப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் மாலைநேரத்தில் அன்புக்கரசி, ஆசிரியர் அறையில் தனியாக இருந்த போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்துள்ளார்.

கத்தியைக் காட்டி நகைப் பறிப்பு

அவர், முதலில் தன்னுடைய மகனைப் பள்ளியில் சேர்ப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்று கேட்டு விசாரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியையும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடைமுறைகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளார்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுத்து, ஆசிரியை கழுத்தில் வைத்து நகைகளைத் தரவில்லை என்றால் கத்தியால் குத்திக் கொன்று விடுவேன் என மிரட்டியதாகத் தெரிகிறது.

பள்ளி ஆசிரியரிடம் பத்தரைப் பவுன் நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபர்

இதனால் அதிர்ச்சியடைந்த அன்புக்கரசி, தான் அணிந்திருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட பத்தரை பவுன் நகைகளைக் கழற்றி, வாலிபரிடம் கொடுத்துள்ளார். இவற்றை எடுத்துக்கொண்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து ஆசிரியை, சக ஆசிரியர்களிடம் கூறியதையடுத்து, காட்டூர் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

தேடும் பணியில் காவல்துறை

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நகைகளுடன் மாயமான மர்ம நபரைத் தேடி வருகின்றனர். பள்ளியில் மகனை சேர்ப்பது போல் நடித்து ஆசிரியரிடம், பள்ளி வளாகத்திலேயே நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்? - ஆளுநர் ஆர்.என்.ரவி

ABOUT THE AUTHOR

...view details