Teacher booked under POCSO: கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கணினி ஆசிரியராக விஜய் ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகிறார்.
அவர் மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறி மாணவ, மாணவிகள் நேற்று (டிசம்பர் 24) பள்ளியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் உடனடியாக ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்தனர்.
இதனைத்தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியர் விஜய் ஆனந்தை கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:TNPSC Group 4: குரூப் 4 தேர்வுக்கு தமிழ் மொழி கட்டாயம்: 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைமுறைப்படுத்த கோரிக்கை