கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகேவுள்ள பெத்தநாயக்கனூரில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விதமாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் அழிந்துவரும் பாரம்பரிய கலைகளான கும்மிபாட்டு, நுங்கு வண்டி ஓட்டுதல், டயர் வண்டி ஓட்டுவது, பம்பரம் சுற்றுதல், பானை உடைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இது குறித்து பள்ளி ஆசிரியர் பாலமுருகன் கூறியதாவது :- “எங்கள் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதை நாங்கள் பொங்கல் விழாவாக கொண்டாடுவதை விட மனமகிழ் மரபு விளையாட்டுகளை கொண்டாடி வருகிறோம். நமது தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை முதன்மைப்படுத்தும் வகையிலும் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலும் இந்த பாரம்பரிய விளையாட்டுகளை கொண்டாடுகிறோம். முழுமையாக குழந்தைகள் அலைபேசி உலகத்தில் உள்ளனர்.