தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே ஒரு மாணவனுக்காக திறக்கப்பட்ட அரசுப்பள்ளி! - அரசு பள்ளி

கோவை: வால்பாறை அருகே ஒரு மாணவனுக்காக அரசுப்பள்ளி ஒன்று திறக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

school

By

Published : Jun 22, 2019, 7:21 AM IST

கோவை மாவட்டம் வால்பாறையில் 72 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இதில் வால்பாறை அருகே சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் ஆதிதிராவிடர் நலப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்தாண்டு மாணவ, மாணவியர் யாரும் சேராததால், அந்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் ராமையா-ராஜலட்சுமி தம்பதியினர், தங்களின் ஐந்து வயது மகன் சிவாவை இப்பள்ளியில் சேர்க்க முடிவெடுத்தனர். இதையடுத்து, இந்தத் தகவல் கல்வி அலுவலருக்கு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மாணவனுக்காக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு இப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதிலும் மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி பல்வேறு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவரும் நிலையில், ஒரு மாணவனுக்காக பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details