கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். கரோனா பரவல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் படித்து வந்தார். இந்நிலையில் மாணவி திடீரென்று மாயமானார்.
பள்ளி மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த இருவர் கைது! - போக்சோ
கோவையில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த கால் டாக்ஸி ஓட்டுநர் உள்பட இருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் மாணவி குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் செல்வபுரம் காவல்துறையினர் புகார் செய்தனர். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மாணவி வேளாங்கண்ணி பகுதியில் இருந்ததைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அங்குச் சென்று மாணவியை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் மாணவியிடம் விசாரித்தபோது, அதே பகுதியில் வசித்து வரும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஏழுமலை (29) என்பவர் மாணவிக்கு ஆசை வார்த்தைக் கூறி, செல்வபுரத்தைச் சேர்ந்த கால்டாக்ஸி டிரைவர் சண்முகம்(30) உதவியுடன் கடத்தி சென்றதும், அவர்கள் மாணவியை ஊட்டி, திருச்சி ஆகிய இடங்களுக்கு கூட்டி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து செல்வபுரம் காவல்துறையினர் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் இருவரையும் போக்சோ சட்டத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.