கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி அப்பகுதியிலுள்ள பூங்காவிற்கு, தனது ஆண் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காகச் சென்றுள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மாணவியின் நண்பர்களில் ஒருவரான மணிகண்டன் என்ற இளைஞர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை நண்பர்களின் உதவியோடு வீடியோவும் எடுத்துள்ளார்.
இச்சம்பவத்தில் மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்த ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் ஆர்.எஸ். புரம் மகளிர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.