கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ 30,000 முதல் ரூ 60,000 அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை தனியார் பள்ளிகள் பெற வேண்டும் என, சார்-ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
சார்- ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் - sub collector office
கோவை: பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் குழந்தைகளுடன் சென்று சார்- ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
சார்- ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள்
இந்நிலையில் அப்பள்ளியில் கட்டணம் செலுத்த சென்றால் தங்கள் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் புறகணிப்பதாகவும், இதனால் ஒரு மாதமாக குழந்தைகள் படிப்பு கேள்விக் குறியாக உள்ளது. எனவே, தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சார் ஆட்சியிரிடம் பெற்றோர்கள் குழந்தைகளுடன் சென்று புகார் அளித்தனர்.