தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திருமாவளனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும்" வேலூர் இப்ராஹிம்! - vck leader thirumavalavan

கோவை: திருமாவளனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்துவோம் என, பாஜக ஆதரவாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

திருமாவளனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும்- வேலூர் இப்ராஹிம்!
திருமாவளனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும்- வேலூர் இப்ராஹிம்!

By

Published : Dec 31, 2020, 7:49 AM IST

கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் ஆதரவாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத நல்லிணக்கத்தை நாங்கள் முன்னெடுக்கும்போது விசிக தலைவர் திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

தந்தை பெரியார் செய்த காரியத்தைத் தான் திருமாவளவனும் செய்கிறார். நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று கூறும் எஸ்டிபிஐ போன்ற அமைப்புகளோடு திருமாவளவன் கொஞ்சி கொண்டிருக்கிறார். இனிமேலும் திருமாவளவன், இதுபோன்று செய்து கொண்டிருந்தால் அவருக்கு சேலை கட்டும் போராட்டமானது நடத்தப்படும்.

பாஜக ஆதரவாளர் வேலூர் இப்ராஹிம்

திருமாவளவனின் கட்சியினர் தங்களை மாவட்டத்திற்குள் விடமாட்டேன் என்கிறார்கள். இது பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை, எனது பரப்புரையை கண்டிப்பாக தொடங்குவேன். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் அந்த அனைத்து திட்டங்களையும் மு.க.ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details