கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் இன்று (நவ.5) சிங்காநல்லூர், பீளமேடு, சூலூர், காந்திபுரம், காந்தி பார்க் ஆகிய பகுதிகளில் மாலை 5 மணியிலிருந்து, 7 மணி வரை கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் சூலூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் தொண்டு நிறுவனமான சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின்(கிளை நிறுவனம்) சுற்றுப்புற சுவரின் ஒருபகுதி மழை காரணமாக இடிந்து விழுந்தது.