கோயம்புத்தூர்:வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருந்துவமனைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் வருகை தருகின்றனர். ஒரு நாளுக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகிறது. வால்பாறையில் இருந்து வரும் நோயாளிகளுக்கு அவசர கால சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுகின்றனர்.
தலைமை மருத்துவர் ஒருவர், 2 கூடுதல் மருத்துவர்கள், 6 செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என பலர் இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிகிறது.