கோவை: கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், ஜேம்ஸ். இவர் கோவை ஆர்.எஸ். புரம், ராமச்சந்திரா சாலையில் எல்இடி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரிடம், கடந்த 4ஆம் தேதி சுகாதாரப் பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு வாரம் கழித்து வருமாறு கூறியுள்ளார்.
அப்பணியாளர் 500 ரூபாய் கேட்டு தொந்தரவு செய்யவே, இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி சுகாதார பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து, ஜேம்ஸ் கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.