தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் மருத்துவமனை ஊழியர்கள் தொந்தரவால் தூய்மைப் பணியாளர் தற்கொலை

கோயம்புத்தூர்: தனியார் மருத்துவமனை ஊழியர்கள் தொந்தரவால் தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினர்
உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினர்

By

Published : Feb 5, 2021, 2:58 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் கடந்த நான்கு வருடங்களாக மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

அந்த மருத்துவமனையின் செவிலியர் லதா, அலுவலர்கள் ரேவதி, சாலமன் ஆகிய 3 பேர் ரங்கசாமிக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் காணொலி மூலம் நடந்ததை பதிவு செய்துவிட்டு தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துக்கொண்டார்.

உயிரிழந்த தூய்மைப் பணியாளர்

அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி, மகள்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினர்

மேலும் உழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தனது சாவுக்கு காரணம் இவர்களே! - தற்கொலை செய்துகொண்ட தூய்மைப் பணியாளரின் காணொலி வைரல்!

ABOUT THE AUTHOR

...view details