கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்த பூண்டி மலைப்பகுதியில் போளுவாம்பட்டி வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த போளுவம்பட்டி வனச்சரகத்தில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள இந்த சந்தன மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போளுவம்பட்டி வனத்துறையினர் தாணிகண்டி மலைக்கிராமம் அருகே வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வேரோடு வெட்டி கடத்தப்பட்டது தெரிய வந்தது.